கோவிட்-19 Vaccine – கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள கட்டாயப்படுத்திய குடும்பத்தினர் – காவலாளி எடுத்த விபரீத முடிவு

Andra News

0
182
Covid_Death

காவலாளி சிவபிரகாஷ் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள பல காரணங்களை சுட்டி காட்டி மறுத்து வந்துள்ளார்.

ஹைதராபாத்தில் மணி கொண்டா பகுதியை சேர்ந்த காவலாளி சிவபிரகாஷ் என்பவரை தனது குடும்பத்தினர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு கட்டாயப்படுத்தி வந்ததால் பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஜூன் 12 ஆம் தேதி அன்று இரவு 10 மணி அளவில் தனது தாய் மற்றும் சகோதரருடன் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருந்த நிலையில் 22 வயதான காவலாளி சிவபிரகாஷ் தற்கொலை செய்துகொண்டார்.

சிவபிரகாஷ் வீட்டின் அருகே ஒரு திறந்த வெளி இடத்தில் கையில் பூச்சி கொல்லி பாட்டிலுடன் மயக்க நிலையில் கிடந்த அவரை உடனடியாக மீட்டு மருத்துவ மனையில் சேர்த்து உள்ளனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி ஜூன் 13 ஆம் தேதி உயிரிழந்தார்.

இதற்கிடையே, உயிரிழந்த காவலாளி சிவ பிரகாஷின் சகோதரர் நாகதுர்கா ராவ் அவர்கள் அளித்த புகாரின் படி, காவலாளி பிரகாஷின் குடும்பத்தினர் கடந்த சில வாரங்களாக கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளுமாறு அவரை கேட்டு கொண்டுள்ளனர்.

ஆனால் தடுப்பூசிக்கு பல காரணங்களை சுட்டி காட்டி அதை செலுத்தி கொள்ளாமல் மறுத்து வந்துள்ளார் அவர். அதன் பிறகு ஏற்பட்ட வாக்குவாதத்தால் சிவ பிரகாஷ் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி அருகே தல்ல பாலம் கிராமத்தைச் சேர்ந்த காவலாளி சிவ பிரகாஷ், கே.பி.ஆர் காலனியின் குடியிருப்பு ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். சிவபிரகாஷின் தற்கொலை சம்பவம் குறித்து ராய்துர்கம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here