தருமபுரி முத்தம்பட்டி வனப்பகுதியில் ஆங்காங்கே கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்.

medical waste

0
240
dharmapuri_news

தருமபுரி முத்தம்பட்டி வனப்பகுதியில் ஆங்காங்கே கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்.

ஹனுமான் கோவில் அமைந்துள்ள முத்தம்பட்டியில், தர்மபுரி மற்றும் அதை சுற்றி உள்ள பல ஊர்களில் இருந்து மக்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இங்கே குரங்குகள் போன்ற பல வன விலங்குகளும் உள்ளது.

தற்போது கொரோனா தொற்று பரவல் அதன் இரண்டவது அலையை எட்டியுள்ள நிலையில்..

மருத்துவ கழிவுகளான பயன்படுத்தப்பட்ட ஊசிகள், சிரஜ்ஜிக்கள், பஞ்சு போன்றவை மூட்டையில் கட்டி வீசப்பட்டுள்ளது. வனவிலங்குகளும் அந்த மூட்டையை உணவு என எண்ணி கிழித்துள்ளது.

மருத்துவ கழிவுகளை இது போன்று வீசும் மருத்துவமனைகளை என்னவென்று சொல்வது. இந்த மருத்துவ கழிவுகளால் நோய் பரவினால் யார் பொறுப்பு? ஏற்கனவே சென்ற வருடம் இதே போன்று தருமபுரி தகனமையம் அருகே மருத்துவ கழிவுகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து வனப்பகுதியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொது நலன் கருதி செய்தி வெளியிட்டவர்: ராதா ஸ்டோர்ஸ் உரிமையாளர், தர்மபுரி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here