கொரோனா பரவல் காரணமாக திருப்பதியில் பக்தர்களுக்கு இலவச தரிசனம் ரத்து

0
93
tirumala_news

திருப்பதி: திருமலையில் பக்தர்களுக்கு கொரோனா பரவல் அதிகமாக இருக்கும் காரணத்தால், திருமலை ஏழுமலையான் கோவிலில், பக்தர்களுக்கு இலவச தரிசனம், நாளை முதல், ரத்து செய்யப்பட்டுள்ளது.

நமது நாடு முழுதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் இந்த நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.

அதன்படி, நாளை முதல், கூட நெரிசலை தவிர்த்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த முதல் கட்டமாக பக்தர்களுக்கு இலவச தரிசனம் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதற்காக, திருப்பதியில் நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்கள் அளிக்கப்படுவது திங்கள் முதல் நிறுத்தப்படுகிறது.

விரைவு தரிசன டிக்கெட் உள்ளிட்ட ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவர். திருமலைக்கு வரும் பக்தர்கள் தகுந்த சுகாதார முன்னெச்சரிக்கையுடன் வர வேண்டும் என, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ஆன்லைனில் புக் செய்து வரும் மக்களால் மட்டும் கொரோனா பரவாதா? இலவச தரிசனத்திற்கு வரும் ஏழைகளால் மட்டும் கொரோனா பரவுமா என மக்கள் மனதில் குழப்பம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here