பிரபல பாலிவுட் நடிகை கத்ரினா கைஃபுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது

Corona Affect

0
112
katrina_kaif

பிரபல பாலிவுட் நடிகை கத்ரினா கைஃபுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பதிவு: ஏப்ரல் 06, 2021

இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரிக்க தொடங்கிவிட்டது. இந்த சூழ்நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் அவர்களுக்கு நேற்று முன் தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அக்‌ஷய் குமார் அவரது மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில் நமது இளைஞர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த பாலிவுட் நடிகை கத்ரினா கைஃபுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நான் எடுத்துக்கொண்ட கொரோனா பரிசோதனையில் எனக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே நான் உடனடியாக என்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். எனது மருத்துவர்களின் ஆலோசனையின் கீழ் அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றுகிறேன். கடந்த சில தினங்களாக என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் உடனடியாக தங்களை பரிசோதித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் எல்லா அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி” என்று அதில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here