அஷ்வின் தான் விஜய் டிவி குக் வித் கோமாளி டைட்டில் வின்னரா? வைரல் ஆகும் ஆரவாரமான ஃபோட்டோ!

Award Winner

0
127
Award

ஸ்டார் விஜய் டிவியில் ஒளிபரப்பு ஆகி கொண்டு இருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி நிறைவுக்கு வர போகிறது. இந்த சீசனின் கடைசி ஷூட்டிங் தளத்தில் இருந்து குக் வித் கோமாளி பிரபலங்கள் வெளியிட்ட உருக்கமான சில பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அஷ்வின், சிவாங்கி, புகழ், தர்ஷா குப்தா, கனி, மணிமேகலை, சரத், பாலா, பவித்ரா, ஷகிலா, பாபா பாஸ்கர், சுனிதா உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி சீசன்-1ஐ விடவும் வேற லெவலில் வைரலாகிவிட்டது.

ரியாலிட்டி டிவி ஷோக்களில் மிக முக்கியமான ஷோவாகவும், அனைத்து தரப்பு ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற ஒரு ரியாலிட்டி ஷோவாகவும் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மாறியுள்ளதற்கு இந்த 2வது சீசனின் வெற்றியும் ஒரு முக்கியக் காரணம்.

அதாவது குறிப்பாக குக் வித் கோமாளியின் இந்த சீசனில் பாடகி சிவாங்கி (செல்ல குழந்தை), நடிகர் அஷ்வின் (பெண்கள் விரும்பும் அழகன்), நடிகை பவித்ரா கலக்கப்போவது யாரு பாலா மற்றும் புகழ் என பலரும் அடுத்த கட்ட வளர்ச்சியை எட்டி வருகின்றனர்.

இதில் குறிப்பாக சிவாங்கியும் புகழும் அண்ணன் தங்கையாகவும், சிவாங்கியும் அஷ்வின் க்யூட் க்ரஷ் காம்போவாகவும் வைரலாகியுள்ளனர்.

இதில் புகழ் விஜய் சேதுபதியின் 46வது படம் உள்ளிட்ட சில படங்களிலும் சிவாங்கி சிவகார்த்திகேயனின் டான் படத்திலும் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், குக் வித் கோமாளியின் இந்த சீசனில் டைட்டில் வின்னராக அஷ்வின் ஜெயிக்க வேண்டும் என அஷ்வின் – சிவாங்கி ரசிகர்கள் விரும்பவே செய்கின்றனர்.

இன்னொருபுறம் மாறாத உழைப்பை போட்டுள்ள கனி, அவரைத் தொடர்ந்து பாபா பாஸ்கர், பவித்ரா, ஷகிலா என யார் ஜெயிப்பார்கள் என்பதை குக் வித் கோமாளிகள் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இதனிடையே அஷ்வின் (அல்லது) கனி தான் ஜெயிக்கும் வாய்ப்புள்ளதாக பேசப்பட்டு வருகிறது. எனினும், அனைவரும் ஒன்றாக ஒரு குடும்பம் போல இருந்து வரும் இந்த நிகழ்ச்சியில் யார் ஜெயித்தாலும் அனைவருக்குமான மகிழ்ச்சியான ஒன்றாகத்தான் இருக்கும் என்கின்றனர்.

இதுல செய்தி என்னனா, இதனிடையே அஷ்வின் கோப்பையுடன் செஃப் தாமோதரன் மற்றும் நடிகர் சிம்புவுடன் நிற்கும் ஆரவாரமான ஒரு புகைப்படம் ட்ரெண்ட் ஆகி வருகிறது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here